முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் இதயத்துல்லா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் போது, அதிமுக கட்சியிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களை மாவட்டத் தலைவர் இதயத்துல்லா பொன்னாடை அணிவித்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை நாராயணன் தியேட்டர் பகுதியில் இருந்து ராஜீவ் காந்தி திருவுருவப்படத்தை ஏந்தியவாறு காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக புறப்பட்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவ சிலையை அடைந்தது.
அங்கு கட்சியினர் மலர்கள் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், ராஜீவ் காந்தி அவர்களின் புகழை போற்றியும், அவரது சேவைகளை நினைவுகூர்ந்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.


No comments:
Post a Comment