கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 May 2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு.

 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி சாதனை படைத்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சிறப்பு பாராட்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ். பிரசாந்த், இ.ஆப., பாராட்டுக் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.


தமிழகத்தில் கல்வித்துறையில் முன்னேற்றம் காண மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகள் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, மாவட்டத்தின் பல அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளன.


இந்த சாதனையை உருவாக்கிய தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உழைப்பை பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கினார். மேலும், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், வரும் ஆண்டுகளிலும் இதேபோன்ற சாதனைகளை தொடர வேண்டும் என்றும் அவர் வாழ்த்துரை வழங்கினார்.


நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த பாராட்டு விழா, அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான ஊக்கமாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad