உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கல் – சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் பங்கேற்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 8 January 2026

உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கல் – சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் பங்கேற்பு.


உளுந்தூர்பேட்டை, ஜனவரி 08

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கத் தொகை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.3,000 மற்றும் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு ஏழை எளிய மக்களின் நலனை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், இத்திட்டங்கள் அரசின் சமூக நீதி மற்றும் மக்கள் நல நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், அடித்தட்டு மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் இவை அமைகின்றன என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ், ஒன்றிய சேர்மன் ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் நலத்திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.


மேலும், நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி இராமலிங்கம், செல்வகுமாரி இரமேஷ்பாபு, கலா சுந்தரமூர்த்தி, சிவசங்கரி சந்திரகுமார், மனோபாலன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகை மற்றும் தொகுப்புகளை பெற்றுச் சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad