உளுந்தூர்பேட்டையில் வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தின அனுசரிப்பு; தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 25 December 2025

உளுந்தூர்பேட்டையில் வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தின அனுசரிப்பு; தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை.


உளுந்தூர்பேட்டை, டிச. 25:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலும், பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படியும், கழகத்தின் கொள்கைத் தலைவரான வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் R. பரணி பாலாஜி அவர்கள் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் ஒன்றியம், நகரம், பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, தொண்டரணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad