கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய இந்து நடுநிலைப் பள்ளியில் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இருதய பரிசோதனை முகாம் நடந்தது இந்த முகாமினை உளுந்தூர்பேட்டை நகராட்சி நகர மன்ற துணைத் தலைவர் திரு. வைத்தியநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் மாவட்டத் துணை ஆளுநர் அன்பழகன், தலைவர் செந்தில்குமரன், செயலாளர் பாபு, பொருளாளர் வெங்கடேஷ், முன்னாள் துணை ஆளுநர்கள் வழக்கறிஞர் அன்பழகன், வின்சென்ட், திலீப் மற்றும் முன்னாள் தலைவர்கள் வசந்தகுமார், சுப்பிரமணியன், மோகன்ராஜ், வெங்கடாஜலபதி, சுரேஷ்குமார், இரமேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் தர்மலிங்கம், முத்துக்குமாரசாமி, ராஜேந்திரன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பரிசோதனைகள் செய்து கொண்டனர்.
No comments:
Post a Comment