கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு மீண்டும் கவுதம் சிகாமணி வாய்ப்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 18 March 2024

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு மீண்டும் கவுதம் சிகாமணி வாய்ப்பு.


கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு மீண்டும் கவுதம் சிகாமணி வாய்ப்பு கள்ளக்குறிச்சி கவுதம் சிகாமணி  கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு மீண்டும் கவுதம் சிகாமணி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மீண்டும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய கவுதம் சிகாமணி மீண்டும் களம் இறக்கப்படுவதாக கூறப்படுகிறது.


கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 2019 ஆம் ஆண்டு வேட்பாளராக நிறுத்தப்பட்ட கவுதம் சிகாமணி 721713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீது செம்மண் குவாரி வழக்கு நிலுவையில் உள்ளதால் இவர் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட மாட்டார் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் கவுதம் சிகாமணி பெயரை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. 


இதனால் மீண்டும் கவுதம் சிகாமணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை திமுக தலைமை வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் இவர் பெயர் இடம் பெறும் என்பது பெரும்பாலான அரசியல் வட்டாரங்கள் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad