ரிஷிவந்தியம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒருநாள் பயிற்சி - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 17 March 2023

ரிஷிவந்தியம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒருநாள் பயிற்சி


ரிஷிவந்தியம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

             
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட அரியலூரில் முன் தொடக்க நிலை , தொடக்க நிலை , இடை நிலையில் பயிலும் மாற்றுதிறனுடைய மாணவர்களின் பாதுகாவலர் (அ) பெற்றோர்களுக்கான ஒரு நாள் ஒருங்கிணைந்தப் பயிற்சி இன்று ( 17/03/2023 ) தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, மோகன் சௌந்தரராஜன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கார்த்திக்கேயன் ஆகியோர் முன்னிலை வகித்ததுடன், சிறப்பு Uயிற்றுநர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார்.  


              
முடநீக்கியல் மருத்துவர் ரேவதி ஆரம்ப நிலையில் மாற்றுத்திறன் குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். சிறப்புப் பயிற்றுநர்கள் அன்னராசு, எழிலரசி, ஸ்டெல்லா விமலாராணி, , டே கேர் ஆசிரியை வேங்கையம்மாள், உதவியாளர் கிருஷ்ணவேணி, போன்றோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்கள். வட்டார ஒருங்கிணைப்பாளர் அனுராதா 
ஒருங்கிணைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்களான முத்து, கோவிந்தராஜிலு மணிகண்டன் ஆகியோர் உடனிருந்துச் சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad