கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களமருதூர் கிராமத்தில் 18/03/23 அன்று குடிநீர் மற்றும் மின்விளக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கிராம மக்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து நாளை குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ஜீவன்ராஜ், மாவட்டப் பொருளாளர் சிவபெருமான், உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்னுரங்கம், தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச்செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் கதிர்.காசிநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதி மாணவரணி செயலாளர் சதிஷ் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment