உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சேந்தநாடு கிராமத்துக்கு சென்று சாருஹாசன்(வயது 23) என்பவரது வீட்டை சோதனை செய்த போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சாருஹாசனை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
செய்தியாளர் - க.சமியுல்லா
No comments:
Post a Comment