திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் அருள்பாண்டியன்(வயது 23). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பூவனூர் கிராமம் அருகே உள்ள கெடிலம் ஆற்றின் கரையோரம் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது மாடுகளுக்கு தண்ணீர் காட்ட முயன்ற அருள்பாண்டியன் எதிர்பாராத விதமாக ஆற்றில் உள்ள சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அருள்பாண்டியன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி .
No comments:
Post a Comment