சின்னக்கொள்ளியூர் கிராமத்தில் ரூ.11 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னக்கொள்ளியூர் கிராமத்தில் 2 இடங்களில் ரூ.11 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, நிர்வாகி சாமி சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர் தெய்வீகன், புருஷோத், செல்வம், நிர்வாகிகள் செல்வகுமார், தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment