உளுந்தூர்பேட்டை - விருதாச்சலம் சாலை வாகன ஓட்டிகள் அவதி விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
உளுந்தூர்பேட்டை விருதாச்சலம் சாலை மிகவும் முக்கியமான சாலை இந்த சாலையில் 10 நாட்களுக்கு முன்பு ரோடு போடுவதற்காக வெறும் ஜல்லியை மட்டுமே ரோட்டில் போடப்பட்டுள்ளன.
இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்போர் கடும் அவதிப்படுகின்றனர்.
இந்த சாலையில் சாலையில்தான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மற்றும் மூன்று தனியார் வங்கிகள் உள்ளன.
பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வங்கிக்கு செல்லும் பயனாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக இந்த சாலையை சீரமைத்து தராவிட்டால் மிக விரைவில் வியாபாரிகள் மற்றும் இளைஞர்கள் இணைந்து சாலை மறியல் போராட்டம் செய்யலாம் என்று ஆலோசனை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment