ஆசனூரில் புதிய மின்மாற்றி அமைப்பு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 May 2026

ஆசனூரில் புதிய மின்மாற்றி அமைப்பு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

 


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பில்லூர் கிராமத்தில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் வணிக மின் இணைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கில், 25 கிவோஆ திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.


பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் இந்த புதிய மின்மாற்றி நிறுவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய மின்மாற்றி மூலம் அப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, தடையற்ற மின்விநியோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.


புதிய மின்மாற்றியின் செயல்பாட்டினை உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மின்மாற்றி மற்றும் மின் இணைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த நிகழ்வில் பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா, பண்டக கட்டுப்பாட்டு அலுவலர் தனராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.


மேலும் இளநிலை பொறியாளர்கள் இராமச்சந்திரன், முருகன், செல்லப்பிள்ளை, முகவர் சக்திவேல், கம்பியாளர்கள் ரமேஷ், குணசேகர், வணிக உதவியாளர் சீதா உள்ளிட்ட மின்வாரிய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு மேம்பட்ட மின்சேவை கிடைக்கும் என்பதால், அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad