உளுந்தூர்பேட்டையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 May 2026

உளுந்தூர்பேட்டையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.

 


கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன், உளுந்தூர்பேட்டை அரிமா சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.


இந்த முகாம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. முகாமை முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக்குமார் ஜோடியா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்களின் பரிசோதனையின் அடிப்படையில் கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோரில் 50-க்கும் மேற்பட்டோர் பாண்டிச்சேரி தவளகுப்பத்தில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.


இந்த முகாமில் அரிமா சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தனர்.


பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகள் வழங்கப்பட்ட இந்த முகாம் சமூக நல சேவையாக பாராட்டப்பட்டது.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad