கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு மருத்துவ சேவைகள், சுகாதாரம், நோயாளிகளின் குறைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 May 2026

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு மருத்துவ சேவைகள், சுகாதாரம், நோயாளிகளின் குறைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்..

 


கள்ளக்குறிச்சி பழைய அரசு மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.அருள்விக்னேஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.பிரகாஷ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் சிகிச்சை பிரிவுகளை நேரில் பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் மருத்துவ சேவைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்தனர்.


மேலும் மருத்துவமனையில் தேவையான கூடுதல் வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து இருப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தூய்மை மற்றும் சுகாதார நிலை போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.


மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உரிய கவனிப்பு மற்றும் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் நலப்பிரிவில் தேவையான வசதிகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


இந்த ஆய்வின்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad