திருமண கோலத்திலேயே வாக்குச் சாவடிக்கு வந்த புதுமணத் தம்பதியினர் ஜனநாயக கடமைக்கு முன்னுரிமை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 April 2026

திருமண கோலத்திலேயே வாக்குச் சாவடிக்கு வந்த புதுமணத் தம்பதியினர் ஜனநாயக கடமைக்கு முன்னுரிமை.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு பகுதியில் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் திருமண நாளிலேயே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.


இன்று காலை திருமணம் நிறைவடைந்த உடனேயே, திருமண அலங்கார கோலத்திலேயே மணமகன் சந்துரு மற்றும் மணமகள் திவ்யா ஆகியோர் நேராக உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.


திருமண விழாவின் பிஸியான சூழலிலும் வாக்களிப்பை தவறவிடாமல், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்ட இத்தம்பதியினரின் செயல் அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. திருமண உடையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த இவர்களை பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் கண்டு, ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் முன்னுதாரணமாகக் குறிப்பிட்டனர்.


இந்த நிகழ்வு, தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கிய தருணங்களிலும் குடிமக்கள் கடமையை மறக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad