100% வாக்களிப்பை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டையில் சுகாதாரத் துறை விழிப்புணர்வு பேரணி.. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 9 April 2026

100% வாக்களிப்பை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டையில் சுகாதாரத் துறை விழிப்புணர்வு பேரணி..

 


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்பேரில், 100 சதவீத வாக்களிப்பை உறுதிசெய்யும் நோக்கில் உளுந்தூர்பேட்டையில் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, 100% வாக்களிப்பு ஜனநாயகத்தின் வலிமை உள்ளிட்ட விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


இந்த பேரணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள், உளுந்தூர்பேட்டை நகராட்சி சுகாதார பணியாளர்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.


இந்த நிகழ்ச்சி மூலம், அனைவரும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்,

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad