file image. |
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்த ரோடு மாமந்தூர் பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவ சேரி சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தினர். இவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 65 பேர் உயிரிழந்தனர். 8 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர். இதில் சிவராமன் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது
No comments:
Post a Comment