விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் செல்வக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆலூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மலர் முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.LKG முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பாக பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பள்ளியின் சார்பாக சமத்துவப் பொங்கல் வைத்தும் மாணவர்கள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சசிக்குமார், சுதா, சங்கர்கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளாக பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் இராபர்ட் சகாயராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment